SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரம்பின் கெடுபிடி காரணமாக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

2018-03-14@ 17:36:18

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் படிப்பதற்காக 5.02 லட்சம் மாணவர்கள் விசாக்களை பெற்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையில் கடந்த 2017 மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் ஒன்றில், 2017 செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 4.21 லட்சம் விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 16% குறைவாகும் என கூறியுள்ளது. எச்1 பி விசா கட்டுப்பாடு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணி செய்ய கட்டுப்பாடு ஆகியவை காரணமாக மாணவர்கள் வருகை குறநை்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற கொள்கை மற்றும் விசாவில் அதிக கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகிறது. இதுவே அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.மேலும் இந்தியாவிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுமார் 65,257 மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற நிலையில், 2017-ம் ஆண்டில் 47,302 இந்திய மாணவர்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27% சரிவு ஏற்பட்டுள்ளது. அதே போல சீனாவிலிருந்து  2016-ல் 1,52,120 மாணவர்கள் அமெரிக்கா சென்ற நிலையில், 2017-ல் 1,16,019 மாணவர்களே சென்றுள்ளனர். இந்நிலையில் மேல்படிப்புக்காக செல்ல அமெரிக்காவிற்கு பதில் தற்போது மாணவர்களின் கவனம் கனடா, ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்