SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருணாச்சல பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம்

2018-03-14@ 17:13:30

டியூட்டிங்: இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம், C-17 க்ளோபஸ்மாஸ்டர் அருணாச்சல பிரதேசத்தின் டியூட்டிங் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமான நிலையம்  சீன எல்லைக்கு அருகில் உள்ளது. C-17 க்ளோபஸ்மாஸ்டர் மிக நேர்த்தியாக டியூட்டிங் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

டோக்லாம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவ படை பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டது. எல்லையில் பதற்றம் தணிந்துள்ளதால் வீரர்கள் மற்றும் ராணுவ பொருட்களை எடுத்து வர C-17 க்ளோபஸ்மாஸ்டர் விமானம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வடக்கு டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் தங்கள் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்