SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரபரப்பான சூழலில் நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : டிடிவி அணிக்கு தாவும் மேலும் சில MLA-க்கள்?

2018-03-14@ 12:26:30

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எம்எல்ஏக்கள் செயல்படும் விதம் குறித்து வழக்கமாக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது அன்றைய தினமோ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இதே போன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போது பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. முக்கியமாக நாளை மேலூரில் டிடிவி தினகரன் புதிய கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் இந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க, மேலும் சில எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தினகரன் கூறியிருந்ததால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதேநேரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நாளை மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்