SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் பிரபல அரிசி கடையில் வருமான வரிசோதனை

2018-03-14@ 06:24:49

நெல்லை: நெல்லை டவுனில் பிரபல மொத்த அரிசி கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் நெல்லை, தூத்துக்குடியில் ஓட்டல்கள், நிறுவனங்கள், அரசு ஒப்பந்தாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இந்நிலையில் நெல்லை டவுன் மார்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன்செட்டியார் அரிசி கடையில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நெல்லை வருமான வரித்துறை இணை ஆணையாளர் ஜெயராமன் தலைமையில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், நகைகளின் விவரம், சொத்து பட்டியல்களின் விவரங்கள், கணக்கில் வராத பணம் ஆகியவை பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,  ஆடம்பர கார் ஒன்று தற்போது வாங்கியதன் அடிப்படையில் அரிசி கடையில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்