SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்: செங்குன்றத்தில் பரபரப்பு

2018-03-14@ 01:52:33

சென்னை: அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி தனியாருக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத  அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னம்பாளையம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் சிலர்  அரசு அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளில் ராட்சத மோட்டார் பொருத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி  டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள  பிரபல ஓட்டல் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதி வீடுகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்  குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாதவரம் வட்டாட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அங்குள்ள மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை மறியலில்  ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், விஏஓ சேகர் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘இதுகுறித்து ஆய்வு நடத்தி, விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’  என்று  உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்