SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கோயில் நிலத்தை அளவீடு செய்ய குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு: அறநிலையத்துறையினர் திரும்பி சென்றனர்

2018-03-14@ 01:45:52

திருவொற்றியூர்: நீதிமன்ற உத்தரவுப்படி திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கோயில் நிலத்தை அளவீடு செய்ய வந்த அறநிலையத்துறை  அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி சென்றனர். திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 6.6 ஏக்கர் நிலம்  உள்ளது. சுமார் 80 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் 316 குடும்பங்கள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மதுரை உயர் நீதிமன்ற கிளை, தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து  இடங்களையும் கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டது. அதன்பேரில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும்  திருவொற்றியூர் தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் போலீசாருடன் நேற்று காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதிக்கு வந்தனர்.

இவர்கள், அங்குள்ள கோயில் நிலத்தை அளவீடு செய்ய முயன்றபோது, அங்கு வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து, ‘இந்த நிலத்துக்கான  ஆவணங்கள் தங்களிடம் உள்ளது. இங்கு நாங்கள் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எனவே, இந்த இடத்தை ஆய்வு செய்ய கூடாது,’ என  எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள், ‘நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவீடு செய்ய வந்துள்ளோம். இதனால், உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை,’  என்றனர். ஆனால், அதை ஏற்க மறுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் நாளை (இன்று) நிலத்தை அளவீடு  செய்ய வருவதாக கூறிவிட்டு திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்