SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்பு தானம்

2018-03-14@ 01:45:49

வேளச்சேரி: சாலை விபத்தில் இறந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேர் பயனடைவார்கள் என்று  டாக்டர்கள் தெரிவித்தனர்.
காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சென்பகவள்ளி. ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவரது கணவர் ஜீவானந்தம். இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஜெயலட்சுமி (34), திருமணம் ஆகவில்லை. இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி  பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி காலை ஜெயலட்சுமி வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார். இவர் காரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே  சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த ஒரு பைக் ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், தூக்கிவீசப்பட்ட அவர் பலத்தகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜெயலட்சுமியை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பெற்றுவந்த ஜெயலட்சுமிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி  அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலட்சுமியின் உறவரினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனையடுத்து, டாக்டர்கள்  ஜெயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 கண்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்தனர்.  இவற்றை 7 நபர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்