SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிங்கப்பூர் நிறுவனம் 117 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவின் குல்காமை வாங்க முயற்சி: அதிபர் டிரம்ப் தடை

2018-03-14@ 01:28:54

வாஷிங்டன்: சிங்கப்பூர் நிறுவனம் அமெரிக்காவின் குல்காம் நிறுவனத்தை 117 பில்லியன் டாலருக்கு வாங்கும் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் தடை விதித்துள்ளார்.  செல்போன் உள்ளிட்டவற்றிற்கான மைக்ரோ சிப்களை அமெரிக்காவை சேர்ந்த குல்காம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் குல்காம் நிறுவனத்தை 117 பில்லியன் அமெரிக்கா டாலர் தொகைக்கு விலைக்கு வாங்க சிங்கப்பூரை சேர்ந்த பிராட்கேம் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. குல்காமை விலைக்கு வாங்குவதை நிறுத்த வேண்டும் என கடந்த வாரம் அமெரிக்க எம்பிக்கள் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமெரிக்க எம்பி டங்கன் ஹண்டர் கூறியதாவது: அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களை இணைப்பதால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதன் மூலம் சிங்கப்பூர் சீனாவுக்கு உதவ முன்வருகிறது.

இது போன்ற பிரச்னை ஏற்கனவே பிராட்கேம் எச்பிசி, இன்ஸ்பர் மற்றும் ஸ்டார் டைம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எதிரொலித்தது. பிராட்கேம் உள்ளிட்ட சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கியும் அதை கையகப்படுத்தியும் தொழில்நுட்பங்களை பெற சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் செல்போன்கள் மூலம் நமது புலனாய்வு நிறுவனங்களை கண்காணித்து தீவிரவாத செயல்களில் ஈடுபட சீனா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஹண்டர் தெரிவித்தார். மற்றொரு எம்பி டாம் காட்டன் கூறுகையில், `‘குல்காம் நிறுவனத்தின் பணி அமெரிக்காவின் பாதுகாப்பு பணிக்கு மிக அவசியம். அது பிறநாட்டு நிறுவனங்களின் கைக்கு சென்றுவிட்டால் நமக்கு ஆபத்து’ என்றார்.

இந்த நிலையில் குல்காம் நிறுவனத்தை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்கும் முடிவுக்கு அமெரிக்க அதிபர்  டிரம்ப் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் குல்காம் நிறுவனத்தின் கட்டுப்பாடு சிங்கப்பூரின் பிராட்கேம் நிறுவனத்திற்கு சென்றுவிட்டால் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குல்காம் நிறுவனத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைப்பதற்கோ, கையகப்படுத்துவதற்கோ தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்