SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை நெருங்குவதால் ஈரோடு சந்தையில் காட்டன் ரக ஜவுளி விற்பனை அமோகம்

2018-03-14@ 01:27:14

ஈரோடு: ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனையில் காட்டன் ரகங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஈரோடு  வாராந்திர ஜவுளி சந்தை நேற்று நடந்தது. கோடை காலம் என்பதால் கடந்த 2  வாரங்களாக காட்டன் ரக ஜவுளிகளின் விற்பனை நடந்து வருகிறது. கடந்த இரண்டு  வாரங்களை காட்டிலும் நேற்று நடந்த சந்தையில் காட்டன் ரக ஜவுளிகளுக்கு  நல்ல வரவேற்பு இருந்தது. மொத்த விற்பனை வழக்கம் போல மந்தமாக இருந்த  நிலையில் சில்லரை விற்பனை அமோகமாக நடந்தது. குழந்தைகளுக்கான துணி  வகைகள், பெண்களுக்கான காட்டன் சேலைகள், கோயில் திருவிழா சேலைகள், வேட்டி  விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து  வியாபாரிகள் கூறுகையில், கோடை காலத்தையொட்டி காட்டன் ரகங்களின் விற்பனை  இந்த வாரம் அமோகமாக நடைபெற்றது. குறிப்பாக சில்லரை விற்பனையில் வியாபாரிகள்  மட்டுமல்லாது பொதுமக்களும் அதிக அளவில் ஜவுளிகளை வாங்கிச்சென்றனர். வரும்  வாரங்களிலும் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். மொத்த வியாபாரம்  மந்தமாக இருந்த போதிலும் சில்லரை விற்பனையானது ஜவுளி சந்தை வியாபாரிகளுக்கு  கை கொடுத்துள்ளது என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்