SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு

2018-03-14@ 01:23:21

புதுடெல்லி: சேமிப்பு கணக்குகளுக்கான அபராதம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என ஸ்டேட் பாங்க் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்கள் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ) கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் இருப்பு தொகை சராசரியாக ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும்.  ஸ்டேட் பாங்க் கிளைகள் இருக்கும் பகுதிகளை பொறுத்து நகரம், புறநகர் மற்றும் கிராமப்புற கணக்குகள் என்று குறைந்தபட்ச இருப்பு தொகை அளவீடுகள் மாற்றி அமைத்துள்ளதால், அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அபராத கட்டணம் மாற்றியமைக்கப்படும். சேமிப்பு கணக்குகளில் 50 சதவீதம் இருப்புத்தொகை வைத்து இருந்தால் முன்பு ரூ.30, ஜிஎஸ்டி சேர்த்து அபராதமாக செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பு வைத்து இருந்தால் ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி என்று இருந்த அபராதம்  ரூ.12 உடன் ஜிஎஸ்டி என குறைக்கப்பட்டுள்ளது. இருப்பு தொகை ரூ.75 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது ரூ.15 உடன் ஜிஎஸ்டி என்று குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நகரப்பகுதிகளில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளைகளில் 50 சதவீதம் வரை இருப்பு இருந்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி என்று இருந்த அபராத்தொகை தற்போது ரூ.7.50 மற்றும் ஜிஎஸ்டி என்று குறைக்கப்பட்டுள்ளது.  மேலும் 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பு இருந்தால்  ரூ.30க்கு பதிலாக ரூ.10 ஆகவும், 75 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.40 ஆக இருந்த அபராதம் ரூ.12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி சேர்த்து கட்டவேண்டும்.

கிராமப்புற கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையான  ஆயிரம் ரூபாயை நிர்வகிக்கவேண்டும். சேமிப்பு கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்பு வைத்திருந்தால் ஏற்கனவே ரூ.20 ஆக இருந்த அபராதம் தற்போது ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் முதல் 70 சதவிதத்திற்கும் குறைவாக இருப்பு இருந்தால் ரூ.30 என இருந்த அபராதம் தற்போது ரூ.7.50, 75 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.40ஆக இருந்த அபராதம் ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஜிஎஸ்டி  சேர்த்து செலுத்த வேண்டும். ஸ்டேட் பாங்கில் 41 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இவற்றில் 16 கோடி கணக்குகள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகள் ஆகும். இவற்றுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.

25 கோடி பேருக்கு பலன்ஸ்டேட் பாங்க் குறைந்தபட்ச இருப்பு தொகையை குறைத்துள்ளதால்  25 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் பயன்பெறுவார்கள். சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் அடிப்படை சேமிப்பு கணக்குகளாக தங்களது கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்