SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலிக்க வற்புறுத்தி சக மாணவர் அடாவடி ஹால்டிக்கெட்டை கிழித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை: கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு

2018-03-14@ 01:20:19

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தேவீரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சங்கர். இவரது மகள் தமிழரசி(17),  அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ்2 தேர்வு எழுதி வந்தார். நேற்று முன்தினம், சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவி, மாலையில் வீடு  திரும்பினார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஆவத்துவாடியைச் சேர்ந்த 2 மாணவர்கள் அவரை வழிமறித்தனர். அதில் ஒரு மாணவர், தன்னை  காதலிக்கும்படி கூறி தமிழரசியிடம் தகராறில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த  அந்த மாணவர், தமிழரசியை தாக்கினார். பின்னர், அவரது புத்தக பையை பறித்து கீழே வீசியதோடு, அதில் இருந்த ஹால் டிக்கெட்டை கிழித்து  வீசினார். பின்னர், தன்னை காதலிக்காவிட்டால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டி விட்டு, 2 மாணவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.   இதனால் மனம் உடைந்த மாணவி, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறி, கதறியழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், அந்த மாணவர்களின்  வீட்டுக்கு நாளை(இன்று) சென்று கண்டிப்பதாக ஆறுதல் கூறினர். இந்நிலையில், நேற்று காலை, மாணவி தமிழரசி வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார்.  இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே தமிழரசி  உயிரிழந்தார்.

 தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை, உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என  கூறி மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணன், காவேரிப்பட்டணம்  இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விசாரித்து  நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கூறியதின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, பாரூர் போலீஸ் ஸ்டேஷனையும் மாணவியின்  உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 2 மாணவர்களையும் பிடித்து, போலீசார் விசாரித்து  வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2018

  14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • asiya_mukesh11

  ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

 • kali_ramnatha11

  மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

 • france_gunmanr1

  பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

 • upnepalmarg

  நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்