SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் நீதி மய்யம் அனுப்பிய இமெயிலால் சர்ச்சை கமல் கட்சியில் உறுப்பினர் ஆனாரா தமிழிசை?

2018-03-14@ 01:15:29

திருப்பூர்: பா.ஜ.க.வின் மாநில தலைவரான தனக்கே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை கடிதத்தை அனுப்பியுள்ளதாக  திருப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.திருப்பூரில் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில்  கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை  அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்கப்படும். தமிழகத்தில் யார்  வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது மக்களுக்கு பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும். சிறையில் உள்ளவர்களின் படத்தை போட்டு  நல்லாட்சியை அமைப்போம் என தினகரன் கூறி வருகிறார். இது மிகவும் கேவலமான அரசியலாகும்.  

நடிகர்கள் 50 ஆண்டுகளாக சினிமாவில் சம்பாதித்துள்ளனர். தற்போது சினிமா துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சினிமாத்துறையை  காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி மக்களை காப்பாற்ற முடியும். எனக்கு கடந்த வாரம் இ-மெயிலில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து உறுப்பினர் கடிதம் வந்துள்ளது.  ‘‘நீங்களும் நானும் நாம் ஆனோம்’’ என  கூறப்பட்டு உங்களுடைய உறுப்பினர் எண் என கடிதம் வந்துள்ளது. நான் பா.ஜ.க. மாநில தலைவர் என்பது கூடவா அவர்களுக்கு தெரியாது. இவர்களின்  உறுப்பினர் சேர்க்கை எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் இல்லாதது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வெற்றிடத்தை பா.ஜ.கட்சியால் மட்டுமே நிரப்ப முடியும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.  தமிழிசை உறுப்பினராக சேர்க்கப்பட்டதாக மக்கள் நீதி  மய்யம் சார்பில் கமல்ஹாசன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இமெயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் பாதுகாப்பு:  பாமகவின் பவானி முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ராமநாதன் பாஜவில் சேரும் விழா நேற்று கோபி பெரியார் திடலில் நடந்தது.  தமிழிசை முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் ராமநாதன் பாஜவில் இணைந்தார். நிகழ்ச்சியில் தமிழிசை பேசும்போது, `தமிழகத்தில் புதியவர்கள்  கட்சி ஆரம்பிக்கின்றனர். அவர்களால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. பாமக, தமிழகத்தைவிட்டே போய் கொண்டு உள்ளது’ என்றார்.

தமிழிசை விண்ணப்பித்தார்; கமல்ஹாசன் பதிலடி
கட்சியில் சேர பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விண்ணப்பித்தது உண்மை என கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழிசை பேட்டி குறித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டிவிட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், தமிழிசையின்  இணையதளத்திலிருந்து எங்கள் கட்சியில் சேர விண்ணப்பித்தது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டிவிட்டர் பதிவில் கமல் கட்சி  சார்பில் கூறியிருப்பதாவது: உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம்,  எங்களிடம் இருக்கிறது. தமிழிசை அவர்களே...

நீங்கள் காட்டியது போல நாங்களும் ‘படம்’ காட்ட விரும்பவில்லை.  உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள்  தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் (பாஜ) கோபத்தை அஞ்சினால் செய்த  பதிவை  ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது.  அதுவரை... பதிவு செய்தமைக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்