SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

2018-03-14@ 01:10:30

புதுடெல்லி:  சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை அமைக்கும் பணிக்கு பாதுகாப்பில் சிஆர்பிஎப்  வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நக்சல்கள்  நடத்திய பயங்கர தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 11 நாட்களுக்கு முன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நக்சல்கள் நேற்று நடத்திய தாக்குலில் 9  சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்கரின் கிஸ்டாராமில் உள்ள காட்டுப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் நக்சல்கள் தேடுதல் வேட்டையில்  நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த நக்சல்கள் வீரர்களின் வாகனம் மீது வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்தனர். இதில் வாகனத்தில் இருந்த வீரர்களில் 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் சட்டப்பேரவையில் பேசிய மாநில உள்துறை அமைச்சர ராம்சேவாக் பைக்ரா கூறுகையில், “கடந்த 2 ஆண்டுளில் வெவ்வேறு  என்கவுன்டர் சம்பவங்களில் 300 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார். 37 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அபுஜ்மத் காட்டுப்பகுதியில் முதன் முறையாக இந்த மாத தொடக்கத்தில் 3 நிரந்தர சிஆர்பிஎப் முகாம்கள்  அமைக்கப்பட்டன. முகாம்களில் உள்ள வீரர்கள் காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.நக்சல்களின் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது  என்றும், நக்சல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்