SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2025ம் ஆண்டுக்குள் காசநோய் இந்தியாவில் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

2018-03-14@ 01:08:36

புதுடெல்லி: 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் ‘காசநோயை ஒழிப்போம்’ மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் குறித்து விழிப்புணர்வு  பிரசாரத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:உலக அளவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க 2030ம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள்  காசநோயை ஒழிக்கப்படும். இதற்கான இலக்கை இப்போதே நிர்ணயித்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் காசநோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. காசநோய் முற்றிலும் ஒழிய வேண்டும் என்றால் மாநில அரசுகள் முக்கிய  பங்காற்ற வேண்டும். காசநோய் ஒழிப்பு தொடர்பான இயக்கத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.  அனைவரும் இணைந்து செயல்பட்டால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்