SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளித் துளியாய்

2018-03-14@ 00:28:19

1. ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 2வது டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்ற தென் ஆப்ரிக்க வேகம் காகிசோ ரபாடா, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆஸி. கேப்டன் ஸ்மித் தோள்பட்டையில் இடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட புகாரில், ரபாடா 2 டெஸ்ட் போட்டியில் விளையாட சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் இதர இந்தியா - விதர்பா அணிகள் மோதும் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
3. ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அமோல் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. பர்மிங்காமில் இன்று தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரணாய் உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.
5. ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 15ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடக்க உள்ள போட்டியில், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பச்சை நிற சீருடை அணிந்து விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்