SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎன்பி பாரிபா ஓபன் சகோதரி வீனசிடம் வீழ்ந்தார் செரீனா

2018-03-14@ 00:26:15

இண்டியன் வெல்ஸ் : பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரின் வீனஸ் வில்லியம்சிடம் போராடி தோற்றார். குழந்தை பெற்றுக் கொண்டு ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த செரீனா, மீண்டும் களமிறங்கிய இந்த தொடரில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பெற்றதால் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்சுடனான இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் செட்டில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய செரீனா 3-6 என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அவர் சுதாரித்துக் கொண்டு கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி விளையாடிய வீனஸ் 6-3. 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது. இருவரும் 28 முறை மோதியுள்ளதில் செரீனா 17-11 என முன்னிலை வகிக்கிறார். கடைசியாக மோதிய 9 போட்டிகளில் வீனஸ் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்று அவர் 2வது வெற்றியை பதிவு செய்தார்.

நடப்பு சாம்பியன் எலினா வெஸ்னினா (ரஷ்யா) தனது 3வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கெர்பர் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தனது 3வது சுற்றில் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை (பெலாரஸ்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் அனஸ்டேசியா சேவாஸ்டோவா (லாத்வியா), கர்லா சுவாரெஸ் நவர்ரோ (ஸ்பெயின்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்