SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்சூரன்ஸ், வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை இணைக்க திட்டம் : சீன அரசு அதிரடி

2018-03-14@ 00:24:45

பீஜிங் : சீனாவில் இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை இணைக்க அந்நாட்டு அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் ஆவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாற்றி அமைத்து வாழ்நாள் முழுவதும் தான் அதிபராக செயல்படும் வகையில் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யவைத்தார். இந்த நிலையில் அரசின் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வகையிலும், அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும் வகையிலும், பணி சார்ந்து பல்வேறு துறைகளில் மாற்றம் செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை புதிதாக நியமிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை தற்போது நடந்து கொண்டிருக்கும் சீன நாடாளுமன்ற கூட்டத்தில் ஆய்வுக்காக சமர்பிக்கப்பட உள்ளதாக அரசின் செய்தி நிறுவனம் ஜிங்குவா செய்தி வெளியிட்டுள்ளது. மாற்றி அமைக்கப்படும் புதிய திட்டத்தின்படி 26 அமைச்சகங்களே இருக்கும். இதில் கலாச்சார துறை மற்றும் தேசிய சுற்றுலாத்துறை ஆகியவை ஒரே துறையாக இணைக்கப்படும். இது தவிர சீனாவின் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும்.

வெளிநாட்டு குடியேற்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும். தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஆணையத்தின் அதிகாரம் குறைக்கப்படும். தற்போதைய அமைப்பை ஒப்பிடுகையில் புதிய திட்டத்தில் அமைச்சக அளவிலான நிறுவனங்கள் 8 ஆகவும், துணை அமைச்சக அளவிலான நிறுவனங்கள் 7 ஆகவும் குறைக்கப்படும். முக்கிய துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்