SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசாரணை ஆணையத்தில் ஏடிஜிபி அம்ரேஷ் பூஜாரி ஆஜர் சசிகலா குடும்பம் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டியதா?: நீதிபதி சரமாரி கேள்வி

2018-03-14@ 00:22:56

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரேஷ் பூஜாரி ஆஜரானார். அவரிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இதில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபியாக இருந்த ராமானுஜம் உள்ளிட்ட முக்கியமானவர்கள் அடக்கம். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதியிடம் நீதிபதி நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், கடந்த 2011ல் டிசம்பர் மாதம் உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக்கூடிய நபர் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவரிடம்தான் பல தகவல்களை ஜெயலலிதா பரிமாறுவதாக கூறப்பட்டது. எப்போதும் ஜெயலலிதா உளவு பிரிவில் தனக்கு நம்பிக்கையான ஆட்களை மட்டுமே நியமிப்பார் என்றும் காவல்துறை வட்டாரங்களில் எப்போதும் பேசப்படும். அம்பிரிஷ் புஜாரியை பகைத்துக் கொள்ள கூடாது என்று மற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் நினைப்பதும் உண்டு. காரணம், அவர் அறிக்கை கொடுத்தால் உடனே அதிகாரிகளை ஜெயலலிதா மாற்றி விடுவார் என்பதுதான். இந்நிலையில், கடந்த 2011ல் உளவுத்துறை ெகாடுத்த பகீர் அறிக்கையின் பேரில்தான் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றினார் என்று கடந்த 2011ல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக, சசிகலா குடும்பம் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக அப்போது உளவுத்துறை அந்த அறிக்கை அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, சிபிசிஐடி ஏடிஜிபியாக தற்போது உள்ள அம்ரேஷ் பூஜாரியை விசாரணைக்கு ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார். அதன்பேரில் சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரேஷ் பூஜாரி நேற்று காலை 10.30 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி சுமார் 1.20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடத்தினார். அப்போது சசிகலா கடந்த 2011ல் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன, சசிகலா குடும்பம் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டினார்களா, சசிகலா மீண்டும் போயஸ்கார்டனுக்கு வந்தபோது அவரது ெசல்வாக்கு எப்படி இருந்தது. ஜெயலலிதா உடல் நிலை இந்த கால கட்டங்களில் எவ்வாறு இருந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதற்கு அம்ரேஷ் பூஜாரி உரிய விளக்கம் அளித்தார்.

அவரது பதிலை நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து காலை 11.50 மணியளவில் விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில சசிகலா தரப்பை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2011ல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற போது கோவை கமிஷனராக பூஜாரி இருந்துள்ளார். அதன்பிறகுதான் அவர் உளவுத்துறை ஐஜியாக பொறுப்பேற்றார். சசிகலா குடும்பம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தாமரைக்கண்ணன் தான் உளவுத்துறை ஐஜியாக இருந்தார் என்று அம்ரேஷ் பூஜாரி விசாரணையில் தெரிவித்தார்.

சசிகலா மீண்டும் போயஸ்கார்டனுக்கு வருவதற்கு முன்புதான் அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டதாக கூறினார். அதே நேரத்தில் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அவர் ஆணையத்திடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5ம் தேதி பூஜாரி சென்னையில் இல்லை என்றும், திருப்பூரில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்தார்’ என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

டாக்டர் சிவக்குமார் இன்று ஆஜர்: சசிகலா உறவினரும், டாக்டருமான சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகிறார். ஜெயலலிதாவுக்கு கை, கால் வலிக்கு நீண்ட நாட்களாக கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்து வழங்கப்பட்டதால்தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக புகார் உள்ளது. டாக்டர் சிவக்குமார் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவராக இருந்துள்ளார். எனவே, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழு விவரமும் அவருக்கு தெரியும் என்பதால் இரண்டாவது முறையாக ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்