SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை, தேனி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் ரூ.189 கோடியில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டப்பணிகள் : முதல்வர் தொடங்கி வைத்தார்

2018-03-14@ 00:12:41

சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை ரூ.189 கோடி மதிப்பீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை, நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். மேலும், 143 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம், வகுப்பறைக் கட்டடங்கள், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், பூங்காக்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். அதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பான நொளம்பூர் பகுதியில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 28,000 மக்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், சென்னை, காரம்பாக்கம் பகுதிகளில் 20 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம், மதுரவாயல் பகுதிகளில் 60 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மற்றும் மயிலாடும்பாறை ஒன்றியங்களைச் சார்ந்த ஆத்தங்கரைப்பட்டி மற்றும் 14 இதர ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெரியகுளம் நகராட்சியில் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கம்பம் நகராட்சியில் 18 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் என மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 12 திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்