SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் உயிரிழப்பு குரங்கணி தீவிபத்து பலி 11 ஆக உயர்வு

2018-03-14@ 00:05:20

மதுரை: குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெறுவோரில் 8 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக இரு குழுக்களைச் சேர்ந்த 36 பேர் சென்று காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 10 பேர் பலியாயினர். படுகாயமடைந்தவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், அப்போலோ மருத்துவமனையில் 2 பேர், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 2 பேர், கென்னட் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 13 பேர் மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயமடைந்து மதுரைக்கு வந்த 16 பேரில், ஒருவரை சென்னைக்கும், மற்றொருவரை ஈரோட்டிற்கும், மூன்றாம் நபரை கோவைக்கும் அழைத்துச் சென்று விட்டனர்.

மதுரை அரசு மருத்துமவனையில் சிகிச்சையில் இருந்த 6 பேரில் ஈரோடு மாவட்டம், அய்யங்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகள் திவ்யா (25) நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ விபத்தில் சிக்கிய இவரது கணவர் விவேக் நேற்று முன்தினமே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மதுரையில் சிகிச்சையில் உள்ளவர்களில் 8 பேர் நிலை, 75 சதவீதத்திற்கும் அதிக தீக்காயங்களுடன் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்கள் விவரம் வருமாறு: சென்னை முத்துமணி மகள் அனுவித்யா (25),  சேலம் எடப்பாடி அருகே வேட்டுவபட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் தேவி (29), ஈரோடு கவுண்டன்பாடி ஜேஜே நகர் கிரி மகன் கண்ணன் (26), தஞ்சாவூர் எம்கே ரோடு கிருஷ்ணமூர்த்தி மகள் சாய் வசுமதி (26), உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி (25) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களில் சாய் வசுமதி, சிவசங்கரி ஆகிய 2 பேரை தவிர மற்ற மூவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல மதுரை கென்னட் மருத்துவமனையில் திருப்பூர் அருகே உள்ள தேக்கம்பாளையத்தை சேர்ந்த சரவணன் மனைவி சக்திகலா (40), ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரம் ராமசாமி மகன் சதீஷ்குமார் (29), பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் விஸ்வநாதன் மகள் திவ்யா விஸ்வநாதன் ஆகிய 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.  மதுரை மீனாட்சி மிஷனில் சென்னை பள்ளிக்கரணை சாய்பாபா நகரை சேர்ந்த தினேஷ் மனைவி ஸ்வேதா (28), சென்னை அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த சூரியநாராயணன் மகள் பார்கவி (23) ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். இருவரும்  கவலைக்கிடமாக உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எத்திராஜ் மகள் நிவ்யபிரக்ருதி (24). கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ஜோசப் ஜார்ஜ் மகள் மினா ஜார்ஜ் (32) இருவரும் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்