SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் மாநில வரி வருவாயை வடக்கே செலவழிப்பதா? மோடி மீது சந்திரபாபு பகிரங்க புகார்

2018-03-14@ 00:04:39

திருமலை: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு  பேசியதாவது: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துக்கு இணையான நிதியை சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்குவதாக மத்திய அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தும் வழங்கவில்லை. சிறப்பு நிதியும் வழங்கவில்லை. சிறப்பு அந்தஸ்து உள்ள 8 மாநிலங்களுக்கு 2000ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2017 ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் ரூ.3,847 கோடி மானியம் வழங்கியதாக கணக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டாலும் ராஷ்டிரிய சாம் விகாஸ்யோஜனா திட்டத்தில் பின்தங்கிய மாநிலமாக அறிவித்து மானிய தொகை திரும்ப வழங்கும் வகையில் ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில் பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது அந்த மாநிலத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி சாலை, மின்சாரம் வசதிக்காக ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2015-16ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் அதிகளவில் இருக்கக்கூடிய பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மானியம் வழங்கப்பட்டது. பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஏன் ஆந்திரா மீது ஏற்படவில்லை. மத்திய அரசு தென்மாநிலங்களில் அதிகளவில் வரியை பெற்றுக்கொண்டு வடமாநிலங்களுக்கு செலவு செய்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். இந்த விவகாரத்தில் எந்தவொரு விஷயத்துக்காகவும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். சிறப்பு அந்தஸ்து ஆந்திராவுக்கான உரிமை. இதை எந்தகாலத்துக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இவ்வாறு பேசினார். இதையடுத்து மாநில பிரிவினைக்கான சட்டத்தை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்