SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதார் எண் இணைக்க அவகாசம் காலவரையின்றி நீட்டிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

2018-03-14@ 00:03:51

புதுடெல்லி: ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் வரை செல்போன், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையற்று நீட்டிக்கப்படுவதாக  உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு  சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.   அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும்,  ஆதார் திட்டத்ைதயே எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர்  வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இவை அனைத்தும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று  வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, “வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும்  அரசின் பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. செல்போன் எண்ணுடன் ஆதாரை  இணைப்பதற்கான கெடு பிப்ரவரி 6ம் தேதியுடன் முடிவடைவதும் மாற்றி  அமைக்கப்படுகிறது. இதற்கான கெடுவும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
கடந்த 6ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்  “ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதியில் இருந்து நீட்டிக்கவும்  மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில்,  நீதிபதிகள் சிக்ரி, கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆதாரை பல்வேறு சேவை மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக இணைப்பதற்கான காலக்கெடு வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை காலவரையின்றி நீடிக்கப்படுகின்றது” என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இதுவரை ஆதாரை இணைக்காத பலர் நிம்மதி பெருமூச்சு அடைய முடியும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்