SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

2018-03-13@ 20:09:30

புதுடெல்லி: எதிர்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. கடந்த வாரத்தின் 5 நாட்களிலும் இரு அவைகளிலும் எவ்வித அலுவலும் நடைபெறவில்லை. எதிர்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்கட்சிகள் அமளி காரணமாக  இரு அவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி பிரச்னைக்காக, காங்கிரசும், திரிணாமுலும் இணைந்து அமளியில் ஈடுபடுகின்றன. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர எம்.பி.,க்களும், காவிரி மேலாண் வாரியம் அமைப்பதற்காக திமுக, அதிமுக எம்பிக்களும் அமளியில் ஈடுபடுகின்றனர். இது போன்று தொடர் அமளி இருந்தால், பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தரப்பும், எதிர்க்கட்சி தரப்பும், திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், அதுபோன்ற எந்த முயற்சிகளையும் அரசு தரப்பு இதுவரை அணுகவில்லை. எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும் தொடர்வதால், சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.

இதனால், ‘சமாதான முயற்சிகளில் இறங்காமல், முடிந்த வரை, குரல் ஓட்டெடுப்பு மூலமே, நிதி மசோதாவை நிறைவேற்றி, முக்கிய மசோதாக்களுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கலாமா’ என்ற யோசனை, பா.ஜ.,வுக்கு எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பாகம் ஏப்ரல் 6 வரை நடத்த வேண்டும். ஆனால், அமளி காரணமாக, முன்கூட்டியே, கூட்டத்தொடரை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-03-2018

  20-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • SausageDogWalkLondon

  லண்டனில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான சாஸேஜ் வகை நாய்களின் அணிவகுப்பு: கண்கவர் புகைப்படங்கள்

 • Congress84thNationalConference

  காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு நேற்றுடன் நிறைவு: சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

 • TurkishForcesAfrin

  சிரியாவின் ஆஃப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி ராணுவம்: குர்திஷ் மக்களுக்கான சிலையை தகர்த்தது

 • MicrosoftWordTeacher

  கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்