SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் அறிக்கையில் பரபரப்பு தகவல்

2018-03-13@ 19:41:10

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விஷத்தின் மூலம் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான உயிரிழந்தார். அவர், விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். சசிதரூர், ஓட்டல் நிர்வாகம், சுனந்தாவின் நண்பர்கள், உறவினர்களிடம் தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறப்புக்கான காரணம் குறித்து தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது.இந்நிலையில், சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையில் இருந்த விஷயங்கள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு: சுனந்தா விஷம் மூலம் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உடலில் ஊசி போட்டதற்கான அடையாளம் இருந்தது. உயிரிழப்பதற்கு முன்புதான் இந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. உடலில் சிறு காயங்கள் இருந்ததுடன், பற்களால் கடித்த தடமும் இருந்தன. சுனந்தா, சசி தரூர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக ஓட்டல் ஊழியர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இறப்பதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டுமென தனது உதவியாளரிடம் சுனந்தா கூறியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்