SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018-03-13@ 19:04:25

புதுடெல்லி: வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு தப்புவதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் மகள் சட்டஉதவி செய்திருப்பதாகவும் அதற்காக பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி விட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி தலைமையிலான பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை ஆவேசமாக தாக்கினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட  குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாடு தப்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார்.

இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதியமைச்சர் மவுனம் காத்து வருகிறார். மோசடிக்கு துணை போகும் சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெட்லியின் மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?. இவ்வாறு ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்