SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிக்கெட் தொடரை பார்க்க ரிலையன்ஸ் ஜியோ டிவியில் புதிய சேவை அறிமுகம்

2018-03-13@ 18:40:15

மும்பை: ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டிவி ஆப் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டராக்டிவ் ஸ்போர்ட்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய சேவை இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரையொட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஜியோ டிவி செயலியி்ல் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். இந்தியாவில் விளையாட்டு பார்த்து ரசிக்கப்படும் விதத்தையே இன்டராக்டிவிட்டி ஸ்போர்ட்ஸ் அனுபவம் முற்றிலுமாக மாற்றிவிடும்.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஐந்து வித கேமரா கோணங்களிலும், ஆடியோவினை மைதானத்தில் உள்ள சத்தம், ஸ்டம்ப் மைக் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்யும் வசதி மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் வர்ணனை உள்ளிடவற்றை தேர்வு செய்ய முடியும். இத்துடன் ஒற்றை கிளிக் செய்து முன்னணி கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள், ஸ்கோர் மற்றும் இதர தகவல்களை பார்க்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்