SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஐபிக்கு சொகுசு வாழ்க்கை.. நாங்களோ தங்க வசதியின்றி நடுரோட்டில்... குமுறும் ஆயுதப்படை போலீசார்

2018-03-13@ 17:51:03

சென்னை: ஆயுதப்படை போலீசார் முறையான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தமே அவர்களின் தற்கொலைக்கு தூண்டுவதாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பிற்காக வந்த ஆயுதப்படை காவலர்கள் அடிப்படை வசதியில்லாமல் ஹோட்டலுக்கு வெளியே சாலையோரத்தில் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி பாதுகாப்பிற்கு வந்து அவதிபட்ட காவலர்களில் ஒருவா் ஆடியோ ஒன்றையும் பேசி வெளியிட்டுள்ளார். அதில் ஒரு முக்கிய விஐபிக்காக பிற்பகலில் இருந்து சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டல் பாதுகாப்பிற்காக வந்தனர். அந்த விஐபி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என நிராகரித்துவிட்டார். ஆனால் உயரதிகாரிகளோ ஆயுதப்படை காவலர்கள் விஐபி-க்கு பாதுகாப்பு அளித்தே ஆக வேண்டும் வற்புறுத்துவதாக ஆடியோவில் பேசிய காவலர் கூறியுள்ளார்.

விஐபி இருப்பது அந்த ஹோட்டலின் 10-வது மாடியில், ஆனால் நாங்களோ ஹோட்டல் கேட்டின் நுழைவாயிலில் இருக்கிறோம். 10-வது மாடியில் இருக்கும் விஐபிக்கு எதற்கு பாதுகாப்பு என்றும் காவலா் ஒருவர் மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாதுகாப்பில் இருக்கும் ஆயுதப்படை போலீசாருக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு வசதியையும் ஏற்படுத்தி தராமல் உள்ளனர். இது குறித்து நிர்வாகத்திடம் கேட்ட போது, உங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அப்படி தெரிவித்தால் நாங்கள் உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர போகிறோம் என்றனர்.

காவலர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களா அல்லது நாயா என வினவியுள்ள அவர், இங்குமட்டுமல்ல தங்களை இது போல கேவலமாக பல இடங்களில் நடத்துகின்றனர் என ஆடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலீஸ் துறையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மனஉளைச்சல் ஏற்படுகிறது. முன்னதாக ஜெயலலிதா சமாதியில் காவலுக்கு இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் பணி இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் ஆயுதப்படை போலீசாரே ஆடியோ வெளியிட்டிருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்