SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி விமானங்கள் வாங்க முடிவு..!

2018-03-13@ 17:30:02

டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு சகல வசதிகளுடன் கூடிய  தனித்தனி விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் குடிமகன் என்றழைக்கப்படும் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை பொறுப்பு ஏற்று நாட்டையே ஆளும் பிரதமர் ஆகியோர் நல்லெண்ண அடிப்படையிலும், அரசு முறை பயணமாகவும், சர்வதேச நட்பு மற்றும் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக அடிக்கடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு தனி விமானம் இருக்கிறது. தற்போது அவர்கள் விமானப் படை விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏர் இந்தியாவின் தனி விமானத்தில் பயணம் செய்கின்றனர். இதற்கான வாடகையை அரசு அளித்து வருகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தனித்தனியான நவீனரக விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் போயிங் 747 விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பயணிக்க 2 போயிங் 777-300 ERS விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் ஒரு கலந்தாய்வு அறை, ஒரு அவசர சிகிச்சை அறை, ஓய்வு அறை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறை, வைஃபை வசதி உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். மேலும் எந்த ஆயுதங்களாலும் இந்த விமானத்தை தாக்க முடியாத அளவிற்கு கட்டமைக்கப்பட்டிருக்கும். டெல்லி - அமெரிக்கா இடையில் எங்கும் நிற்காமல் சென்று வர தேவையான அளவிற்கு எரிபொருள் நிரப்பும் வசதி இந்த விமானங்களில் உள்ளது. இப்படிப்பட்ட நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வாங்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக  வரும் நிதியாண்டில் ரூ.4,469 கோடி வரை நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுவது கூடுதல் செய்தி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்