SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருண் ஜெட்லியின் மகள் நிறுவனத்தில் CBI சோதனை நடத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

2018-03-13@ 16:45:57

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் தனது மகளை காப்பாற்றவே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமைதியாக இருக்கிறார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். அவர் தனது பதிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் முன்பாக அருண் ஜெட்லியின் மகளான வழக்கறிஞர் மது, சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார். இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் அருண் ஜெட்லி மவுனம் காத்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது என பதிவிட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி ரூபாய் கடனாக பெற்று அதனை மோசடி செய்து நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விவகாரத்தில், பெரும் தொகையை ஜெட்லியின் மகள் பெற்றிருக்கிறார் என ராகுல் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் இவ்விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாகவும் சாடினார். இது போன்ற சட்ட நிறுவனங்களில் CBI சோதனை நடத்தி வரும் நிலையில், அருண் ஜெட்லியின் மகள் நிறுவனத்தில் ஏன் சோதனை நடத்த கூடாது என வினவியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் முக்கியக் குற்றவாளி நிரவ் மோடி குஜராத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்