SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷமியால் நாட்டுக்கும், மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது : தோனி சர்டிபிகேட்

2018-03-13@ 15:55:07

கொல்கத்தா: வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நல்லவர். அவரால் தனது நாட்டிற்கும், மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது என மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ‌ஷமி மீது, அவரது மனைவி ஹசின் ஜகான் பல பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சில நாட்களுக்கு முன் ஹசின் ஜகான் போலீசில் புகார் அளித்தார். அதில் ‌ஷமியுடன் சேர்ந்து கொண்டு அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து தம்மை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் கணவர் ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டினார். மேலும் அவரது சகோதரர் தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஷமி மீது கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கொல்கத்தா ஜாதவ்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் ஷமி ஆவார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, ஷமி மிகவும் நல்லவர். அவரை நீண்ட காலமாக எனக்கு தெரியும். ஷமியால் நாட்டிற்கும், அவரது மனைவிக்கும் எந்த துரோகமும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை. இதை ஷமிதான் தீர்க்க வேண்டும். இவ்விகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த கூடாது என்ற தோனி, அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து ஷமி மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்