SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவுதியில் கைதான அரச குடும்பத்தினரை சித்ரவதை செய்து சொத்துக்களை அபகரித்த இளவரசர்

2018-03-13@ 10:18:27

துபாய்: சவுதியில் அரச குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின் போது அவர்களை துன்புறுத்தி சொத்துக்களை பறித்துக்கொண்டதாக இளவரசர் மீது புகார்கள் எழுந்துள்ளன. சகல வளமும் கொழிக்கும் நாடாக கருதப்பட்ட சவுதியின் பிரம்மிக்க வைக்கும் பிம்பம், கடந்தாண்டு நவ.4 ஆம் தேதி திடீரென நொறுங்கிச் சரிந்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரும் பெருந்தொழிலதிபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு ரிட்ஸ் கால்டன் என்ற சொகுசு நட்சத்திர விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.

சித்ரவதைக்கு ஆளான செல்வந்தர்கள்
சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது தவறான வழியில் குவித்த சொத்துக்களை அரசு கருவூலத்தில் செலுத்திவிட்டு அனைவரும் விடுதலையானதாக கூறப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் பெரும் சித்ரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானதாக விடுதலையானவர்களில் பலர் தற்போது புலம்பத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களுக்குள் அவர்கள் எங்கிருக்கிறாரகள் என்பதை காட்டிக்கொடுப்பதற்கான கருவி பொறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பெயரளவுக்கே தாங்கள் சுதந்திரமாக உலவி வருவதாகவும், தங்களது சொத்துக்கள் அனைத்தையும் இளவரசர் முகமது பில் சல்மான் அபகரித்துக் கொண்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ரிட்ஸ் கால்டன்  சொகுசு விடுதிக்குள் நடந்த சித்திரவதையில் விடுதலையானவர்களில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் இறந்தேவிட்டதாகவும் கூறுகின்றனர். எந்தநேரமும் அச்சமும், பதற்றமுமாக நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக முன்னாள் செல்வந்தர்கள் கூறுகின்றனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்