SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலம் முழுவதும் தனிக்குழுக்களை அனுப்பி பாஜவின் நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்: அமித்ஷா அதிரடி உத்தரவு

2018-03-13@ 03:09:25

பெங்களூரு:  கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக கட்சியினருக்கு பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்துவருகிறார். மேலும், டெல்லியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கர்நாடக பாஜ தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மேலிட பொறுப்பாளர் மற்றும் கர்நாடக பாஜவினருக்கு அமித்ஷா தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்வது, தேர்தலில் வெற்றிபெறுவது மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது போன்ற வியூகங்களை வகுத்து தருகிறார். அதன்படி கர்நாடக பாஜவினர் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் ஆரம்பத்தில்  பரிவர்த்தனா பேரணியில் தொடங்கி மாநில மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் முதல், தற்போது, பெங்களூரு நகரை காப்போம் என்ற பெயரில் பாதயாத்திரையை நடத்துவதற்கான வியூகங்கள் வகுத்து கொடுத்ததன் பேரில் கர்நாடக பாஜவினர் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.அதிலும், கர்நாடக பாஜவினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்களை பங்கேற்க வைப்பது, பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்களை கலந்துகொள்ளவைப்பது போன்ற உத்தரவுகளின் அடிப்டையில் பெங்களூரு நகரில் கடந்த 10 நாட்களாக பாதயாத்திரை நிகழ்ச்சிகள் முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்களின் நாடித்துடிப்பை பார்க்கும் வகையில் இவர்கள் யாருக்கு ஆதரவாக உள்ளனர். அதாவது, பாஜவுக்கு சாதகமாக உள்ளனரா என்பதை கண்டறிய டெல்லியை சேர்ந்த தனது ஆதரவாளர்கள் மறைமுகமாக கர்நாடகாவுக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 பேர்களை நியமித்திருப்பதாகவும்.  இவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி அந்தந்த தொகுதிகளின் உண்மை நிலவரங்களை அறிக்கையாக அமித்ஷாவுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் கொடுக்கும் அறிக்கையின் பேரில் பாஜவுக்கு ஆதரவு குறைவாக உள்ள தொகுதிகளில் என்ன செய்தால் ஆதரவு பெருகும் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என அமித்ஷா முடிவு செய்துள்ளார்.
அதன்படி டெல்லிக்குழுவினர் தற்போது மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்