SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோட்டார் பந்தய கிளப் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சாம்பியன் கே.டி.மதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2018-03-13@ 00:32:45

சென்னை : இந்திய கார், பைக் விளையாட்டு கிளப்களின் கூட்டமைப்பு (எப்எம்எஸ்சிஐ) சார்பில் 2017ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, முன்னாள் தேசிய சாம்பியன் கே.டி.மதனுக்கு வழங்கப்பட்டது. எப்எம்எஸ்சிஐ சார்பில் கடந்த ஆண்டு  இந்திய, சர்வதேச அளவிலான கார், பைக் ரேஸ்களில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்  நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  விருதுகளை வழங்கினார். ஐதராபாத்தை சேர்ந்த அனின்தித் ரெட்டி(26), தான் அறிமுகமான 2014ம் ஆண்டு முதல் தேசிய அளவிலான ரேஸ் போட்டிகளில் சாதித்து வருகிறார். இவருக்கு  யூரோ ஜேகே 17, எம்ஆர்எப் எப்எப் 1600 ஆகியவற்றில் பட்டம் வென்றதற்காக  2017ம் ஆண்டுக்கான தேசிய சாதனை மோட்டார் விளையாட்டு வீரர் என்ற விருது  வழங்கப்பட்டது.

அதேபோல் 2017ல்  தேசிய அளவிலான ரேஸ்களில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யா,  ரியானா,  கல்யாணி போடேகர் ,  மீரா எர்டா ஆகியோருக்கும் நீதிபதி விருதுகளை வழங்கினார். அப்போது எப்எம்எஸ்சிஐ பெண்கள் விளையாட்டு பிரிவு பொறுப்பாளர் சீதா ரெய்னா உடனிருந்தார். 5 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவரும், எப்எம்எஸ்சிஐ முன்னாள் தலைவருமான  கே.டி.மதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு  சர்வதேச அளவிலான கார், பைக் பந்தயங்களில் வென்ற, பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அபிலாஷ், அர்ஜுன் மய்னி, ஜெகர் தருவாலா,  ஆதித்யா பட்டேல், அர்மான் இப்ராகிம், கிருஷ்ணராஜ் மகாதிக்,  அகில் ரபீந்திரா, ரிக்கி  டோனிசன் உட்பட 16 பேருக்கும், தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற, பங்கேற்று சிறப்பிடம் பெற்ற  மகேஷ், அர்ஜுன் ராஜீவ்,  ஜெகன், அரவிந்த், நடராஜ்,  ராகுல் காந்தராஜ்,  ராதா செல்வராஜன்,  கார்த்திக் தரணி,  சிவராமகிருஷ்ணன்  உட்பட 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் எப்எம்எஸ்சிஐ தலைவர் அக்பர் இப்ராகிம், துணைத்தலைவர் பிரிதிவிராஜ், கவுரவ பொதுச் செயலாளர் ராஜன் சைல், நிர்வாகிகள் பாலமுருகன் உட்பட  இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்