SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் : 4வது சுற்றில் பிளிஸ்கோவா

2018-03-13@ 00:32:02

இண்டியன் வெல்ஸ் : பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் சீனாவின் ஷுவாய் ஸாங்குடன் (32வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (5வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடுமையாகப் போராடிய ஷுவாய் ஸாங் 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், கடைசி செட் ஆட்டத்தில் ஸாங்கின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த பிளிஸ்கோவா 7-5, 5-7, 6-3 என்ற கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய பெத்ரா குவித்தோவா (9வது ரேங்க், செக்.) 2-6, 4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவிடம் (149வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் தனது 3வது சுற்றில் 1-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனை கரோலின் டோல்ஹைடை (அமெரிக்கா) 2 மணி, 5 நிமிடம் போராடி வென்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சாச்சியா விக்கெரியை (அமெரிக்கா) எளிதாக வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பெலாரசின் விக்டோரியா அசரென்கா 1-6, 5-7 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோற்று வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரியா சக்கரி (கிரெனடா), கியாங் வாங் (சீனா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். பெடரர் முன்னேற்றம்: பாரிபா ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் பெடரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) வீழ்த்தினார்.

தகுதிநிலை வீரர் யுகி பாம்ப்ரி (இந்தியா) தனது 2வது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லியை (9வது ரேங்க்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். முன்னணி வீரர்கள் ஜாக் சாக், சாம் குவெரி (அமெரிக்கா), பெலிசியானோ லோபஸ், டேவிட் பெர்ரர் (ஸ்பெயின்), மார்கோஸ் பாக்தாதிஸ் (சைப்ரஸ்), மிலோஸ் ரயோனிச் (கனடா), ஜுவன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஜோகோவிச் அதிர்ச்சி: நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தனது 2வது சுற்றில் 6-7 (3-7), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த தகுதிநிலை வீரர் டாரோ டேனியலிடம் போராடி தோற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்