SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிடஹாஸ் டிராபி டி20 மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

2018-03-13@ 00:31:25

கொழும்பு : முத்தரப்பு டி20 தொடரில், இந்தியா - இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.
டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை தொடக்க வீரர்களாக குணதிலகா, குசால் மெண்டிஸ் களமிறங்கினர். குணதிலகா 17 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் வேகத்தில் ரெய்னாவிடம் பிடிபட்டார்.  

அடுத்து வந்த குசால் பெரேரா 3 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இலங்கை 3.1 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது. இந்த நிலையில், குசால் மெண்டிஸ் - உபுல் தரங்கா ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இலங்கை 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. மெண்டிஸ் 48 ரன், தரங்கா 22 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்