SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுடன் முதல் ஒருநாள் போட்டி ஆஸி. மகளிர் அணி அபார வெற்றி

2018-03-13@ 00:30:55

வதோதரா : இந்திய மகளிர் அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
குஜராத் மாநிலம், வதோதரா ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூனம் ராவுத் 37, சுஷ்மா வர்மா 41, 9வது வீராங்கனையாக களமிறங்கிய பூஜா வஸ்த்ராகர் 51 ரன் (56 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

சுஷ்மா - பூஜா ஜோடி 8வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் இந்த போட்டியில் களமிறங்கவில்லை. ஆஸி. பந்துவீச்சில் ஜெஸ் ஜோனசன் 4, அமண்டா வெலிங்டன் 3, கார்டனர், ஷுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 32,1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து எளிதாக வென்றது. அலிஸா ஹீலி 38, கேப்டன் மெக் லேன்னிங் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.தொடக்க வீராங்கனை நிகோல் போல்டன் 100 ரன் (101 பந்து, 12 பவுண்டரி), எல்லிஸ் பெர்ரி 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போல்டன் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்