SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது டெஸ்ட்: தென் ஆப்ரிக்கா வெற்றி

2018-03-13@ 00:29:14

போர்ட் எலிசபத் : ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ரன், தென் ஆப்ரிக்கா 382 ரன் எடுத்தன. 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்திருந்தது. கடுமையாகப் போராடிய உஸ்மான் கவாஜா 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 39 ரன், டிம் பெய்ன் 5 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மார்ஷ் 45 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த கம்மின்ஸ் (5), மிட்செல் ஸ்டார்க் (1) இருவரும் ரபாடாவின் பந்துவீச்சில் பலியாகினர். நாதன் லயன் 5 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் டி காக் வசம் பிடிபட்டார். ஹேசல்வுட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (79 ஓவர்). பெய்ன் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா 6, மகராஜ், என்ஜிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 101 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. அந்த அணி 22.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து வென்றது. மார்காம் 21, எல்கர் 5, அம்லா 27, டி வில்லியர்ஸ் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் டு பிளெஸ்ஸி 2, டி புருயின் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது. ஐசிசி விதிமுறைகளை மீறி, எதிரணி பேட்ஸ்மேனிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ரபாடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்