SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் முதல் முறையாக இந்தியா முதலிடம்

2018-03-13@ 00:28:46

குவாதலஜாரா : மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரில், இந்திய அணி முதல் முறையாக பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த தொடரின் கடைசி நாளான நேற்று இந்தியா பதக்கம் வெல்லத் தவறினாலும், 4 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. மானு பேக்கர், ஷாஷர் ரிஸ்வி, அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மித்ரவேல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், நட்சத்திர வீரர்கள் ஜித்து ராய், ரவி குமார் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர்.
அமெரிக்க அணி 6 பதக்கங்களுடன் 2வது இடமும், சீனா மற்றும் பிரான்ஸ் அணிகள் தலா 5 பதக்கங்களுடன் முறையே 3வது, 4வது இடங்களைப் பிடித்தன. மொத்தம் 15 நாடுகள் பதக்க பட்டியலில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்