SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎஸ்எல் கால்பந்து 2ம் கட்ட அரை இறுதி சென்னை - கோவா இன்று பலப்பரீட்சை : பைனலுக்கு முன்னேற முனைப்பு

2018-03-13@ 00:28:11

சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் பெங்களூரு அணியுடன் மோதப்போகும் அணி சென்னையா, கோவாவா என்பதை முடிவு செய்யும் 2ம் கட்ட அரை இறுதி போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  அரை இறுதி  முதல் சுற்றில் புனே அணியுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்த பெங்களூரு, 2வது சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. அதேபோல்  சென்னை - கோவா அணிகளிடையேயான அரை இறுதி சுற்றின் முதல் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், இந்த 2 அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்துள்ளதால் இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதி. சொந்த ஊரில் விளையாடுவது சென்னை அணிக்கு சாதகமானதாக இருக்கும். ஆனால் ஏற்கனவே சென்னையில் நடந்த லீக் போட்டியில்  சென்னையின் எப்சி அணியை கோவா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் டிராவானால்:  இன்று நடக்கும் போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி டிரா செய்தாலே போதும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். காரணம், அரை இறுதி முதல் சுற்று போட்டியில் சென்னை அணி வெளியூரில் ஒரு கோல் (அவே கோல்) அடித்துள்ளது. அதனால் சென்னையில் கோவா அணி கோல் அடிக்காவிட்டால் சென்னை அணிக்கு பலன் கிடைக்கும். அதே நேரத்தில் 2-2 என்ற கோல்கள் கணக்கில் அல்லது அதற்கு மேற்பட்ட கோல் கணக்கில்  போட்டி டிராவானால் கோவா அணி இறுதிப்போட்டிக்கு சென்று விடும். காரணம் வெளியூர் கோல் கணக்கில் கோவா அதிக கோல்கள் பெறுவதுதான். இரு அணிகளும்  1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தால் கூடுதல் நேரம், பெனால்டி என வழக்கான நடைமுறைகள் கையாளப்படும். அதனால் இன்றைய போட்டியில்  சென்னை அணி கோவாவை வென்றாக வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்ய வேண்டும். கோல் மழை பொழிவதில்  கோவா அணி முதல் இடத்தில் இருப்பதையும் சென்னை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்: சென்னையில் நடைபெறும் போட்டிகளில் எப்போதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது வழக்கம். சென்னை அணி  மிக முக்கியமான அரை இறுதி போட்டியில் மோதுவதால்  இன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரு விளையாட்டரங்கம் 40 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த எண்ணிக்கை தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TeacherTransfer

  ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

 • GoatYogaAmerica

  ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

 • SurinameRamnath

  அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

 • ColorChangeinMrs

  புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

 • Aurangzebarmynirmala

  ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்