SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழும்பூரிலிருந்து புறப்படும் குருவாயூர், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

2018-03-13@ 00:21:40

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூர்-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும்(வண்டி எண்:16127), சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும்(16129) நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 28ம் தேதி வரை இருமார்க்கமாகவும் கரூர் வழியாக இயக்கப்படும். இதனால் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் நிற்காது. குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலும், தூத்துக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலும் 1 மணி நேரம் தாமதமாக திருச்சியை வந்தடையும். அதேபோல், நாகர்கோவில்-மும்பை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக திருச்சியை வந்தடையும். குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலும் 1 மணி நேரம் 35 நிமிடம் தாமதமாக திருச்சியை வந்தடையும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்