SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸி.,யுடனான 2வது டெஸ்ட் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி

2018-03-12@ 17:36:02

போர்ட் எலிசபத்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 382 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய டி வில்லியர்ஸ் 126 ரன் (146 பந்து, 20 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.

இதையடுத்து, 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து  239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கவாஜா 75, மார்ஷ் 45 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 22.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்