SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியின் புகாரால் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறி..! : சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிய முகமது ஷமி

2018-03-12@ 10:41:11

மனைவியின் குற்றச்சாட்டால் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானதை அடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் உட்பட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள மனைவி ஹசின் ஜகானுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள தயார் என கூறியுள்ளார் ஷமி. உத்திரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். குடும்பத்தில் பிரச்சனையோ அல்லது சந்தேகமோ இருந்தால் அவர் முதலில் தங்களிடம் தான் பேசியிருக்க வேண்டும் என்றார். இருப்பினும் கொல்கத்தா சென்று மனைவியுடன் சமாதானம் பேச தாம் தயாராக இருப்பதாக ஷமி கூறினார். அவருக்கு எது பிரச்சனையாக இருந்ததோ அதை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்நது முறையிட்டு இருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகி இருக்காது என்றார்.

ஆனால் அவரோ ஊடகங்களுக்கு சென்று தமக்கு சிக்கலை உருவாக்கி விட்டார் என்ற ஷமி, தாம் அணியில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முடிவு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். வேண்டுமானால் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து கொள்ளட்டும் என்றார். விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. உட்கார்ந்து பேசினாலே பிரச்சனைகள் தீர்ந்து விடும். என் மகளின் எதிர்காலத்திற்கும் அது தான் நல்லது என்றார் ஷமி. முகமது ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவரது மனைவி ஹசின் ஜகான் , தம்மை கொல்ல முயல்வதாகவும்  கொல்கத்தா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஷமி மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TeacherTransfer

  ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

 • GoatYogaAmerica

  ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

 • SurinameRamnath

  அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

 • ColorChangeinMrs

  புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

 • Aurangzebarmynirmala

  ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்