SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராயல் என்பீல்டு தயாரிக்கும் மின்சார பைக்

2018-03-11@ 01:37:56

எதிர்காலத்தில் வாகன பயன்பாடு அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாறும் நிலை உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் அதற்கான கட்டமைப்பு  பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் மின்சார ஆற்றலை வாகனங்களுக்கு வழங்கும் நடைமுறை முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது. பிறகு, அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட சில ஆசிய நாடுகளிலும் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளது. அதன்படி மஹிந்திரா,  பஜாஜ், ஹீரோ உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்கள் முதல் மாருதி சுஸுகி, போக்ஸ்வேகன், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் வரை இந்தியாவிற்கான  மின்சார வாகன தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 ஏற்கனவே மஹிந்திராவின் மின்சார கார்கள் பயன்பாட்டிலுள்ள நிலையில், இந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது ராயல் என்பீல்டு. நம்  நாட்டிற்கு ஏற்றவாறான மின்சார பைக்கை ராயல் என்பீல்டு தயாரித்து வருகிறது. க்ரூஸர் ரக இருசக்கர வாகன விற்பனையில் நம் நாட்டையே கலக்கி  வரும் நிறுவனம் என்றால் அது ராயல் என்பீல்டுதான். அது தயாரிக்கும் மின்சார இருசக்கர வாகனம் தற்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.  இந்நிறுவனம் தயாரிக்கும் மின்சார ஆற்றல் கொண்ட பைக், புல்லட் மாடலில் களமிறங்கும் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வட்டாரங்கள் தகவல்  தெரிவிக்கின்றன.

 கடந்த 2010ம் ஆண்டு இறுதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் 49,944 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை திறனை இந்தியாவில்  பெற்றிருந்தது. ஆனால், தொடர்ந்து அதன் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்ததால் 2017ம் ஆண்டு முடிவில் 7,52,881 யூனிட்  வாகன விற்பனையை ராயல் என்பீல்டு பதிவு செய்துள்ளது. இந்தியாவில் உருவாகியுள்ள இந்த விற்பனை திறனை தக்கவைத்துக்கொள்ள, எதிர்கால  வாகன விற்பனைக்கு ஏற்றவாறு மின்சார ஆற்றலில் பைக்குகளை தயாரிக்க ராயல் என்பீல்டு ஆயத்தமாகி உள்ளது.  அதன் ஒருபகுதியாக ராயல்  என்பீல்டிற்கு இந்திய அளவில் விற்பனை திறனை தொடர்ந்து அதிகரித்து வரும் புல்லட் மற்றும் கிளாசிக் போன்ற மாடல்களில் மின்சார ஆற்றல்  பெற்ற வாகனங்கள் வெளிவரவுள்ளன.

இதுதவிர, 2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 விதிக்கு உட்பட்டு இயங்கும் இன்ஜின்களுக்கு மட்டுமே அனுமதி என  மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது பிஎஸ் 6 இன்ஜின் தேர்விலும் ராயல் என்பீல்டு பைக்குகளை வெளியிட உள்ளது.  விரைவில் இதற்கான புதிய பிளாட்பார்மை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்