SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்

2018-03-11@ 01:31:54

ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார் மாடலின் டீசரை போக்ஸ்வேகன் குழுமம் வெளியிட்டுள்ளது. ‘’ஐ.டி. விஸியான் கான்செப்ட்’’ என்ற பெயரில்  இந்த கார் மாடல் வர இருக்கிறது. 2018 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் மாடல் அறிமுகம்  செய்யப்பட இருக்கிறது. இந்த கார், மின்சார மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐ.டி வரிசையில் வெளியிடப்பட்ட கார் மாடல்களின்  வரிசையில் இது செடான் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார், 5.11 மீட்டர் நீளமுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  போக்ஸ்வேகன் பேட்டன் காருக்கு மாற்றாக இந்த கார் மின்சார கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்  காருக்கு எதிராக இப்புதிய கார் மாடல் நிலைநிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2025ம் ஆண்டிற்குள் 20 புதிய மின்சார கார்  மாடல்களை போக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், இந்த புதிய ஐடி விஸியான் கான்செப்ட் மாடலும் தயாரிப்பு நிலைக்கு  மேம்படுத்தப்பட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த காரின் மிக முக்கிய அம்சம், ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்கள் இல்லாமல்  வருவதுதான். டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்துடன் இப்புதிய கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெவல்-5 என்ற தானியங்கி நிலையை எட்டிய கார் மாடலாக இதனை போக்ஸ்வேகன் சந்தைக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த காரில் இருக்கும்  இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு சாதனங்களை இயக்க முடியும். இந்த காரில் 111 kWh திறன் வாய்ந்த லித்தியம்  அயான் பேட்டரி பொருத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 665 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.  மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. விலை விவரம் வெளியிடப்படவில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்