SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-03-09@ 11:35:14

சீத்தாப்பழத்தின் கொட்டைகளைக் காயவைத்துப் பொடி செய்து தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்தொல்லை நீங்கும்.

மீன் எண்ணெய்யோடு தேனைக் கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள்கடித்த இடத்தில் பூசி முதலுதவி அளிக்கலாம்.

கத்தரிக்காயைச் சமையலுக்கு உபயோகிக்கும் போது அதன் காம்புகளை மட்டும் நீக்கினால் போதும். மேல்புறத்தில் உள்ள கிரீடத்தை நீக்க வேண்டியதில்லை.

சேற்றுப்புண்கள் மீது வேப்பெண்ணையை பூசி வந்தால் புண்கள் சரியாகும்.

இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து அதில் பட்டுத்துணிகளை அலசிஉலர்த்தினால் பட்டுத்துணிகள் சுருங்காமல் இருக்கும். இழைகளும் விலகாமல் இருக்கும்.

கேரட் வாங்கியவுடன் அதை தண்ணீர்பக்கெட்டில் போட்டுவைத்துவிட்டு இரவில் எடுத்துவிட வேண்டும். மறுநாள் காலை மீண்டும் தண்ணீரில் போட வேண்டும். இப்படியே செய்தால் ஒருவாரம் வரை கேரட்புத்தம்புதிதாக இருக்கும். பிரிட்ஜ்ஜில் வைத்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கேரட்டைப் போட்டு வைக்கலாம்.

தோடு, நெக்லஸ் போன்றவற்றை கூடுமானவரை வெல்வெட் பெட்டியில் வைத்து பாதுகாத்தால் கற்கள் சீக்கிரம் விழாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்