SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகத்தில் பருக்கள் தோன்றுவது ஏன்....?

2018-03-09@ 10:38:50

நமது தோல் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. மேல்பாகம் எபிடெர்மிஸ். அடிப்பாகம் டெர்மிஸ். எபிடெர்மிஸ் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் உள்ளது. டெர்மிஸ் பகுதியில் நரம்புகளும், ரத்தக்குழாய்களும், வியர்வைச் சுரப்பிகளும், முடிகளின் வேர்களும் உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள செபாசியஸ் என்னும் சுரப்பிஎண்ணெய் போன்ற திரவத்தைச் சுரக்கிறது. அந்த எண்ணெய் இச்சுரப்பியின் மேல்பாகத்தில் உள்ள துளைகளின் வழியே வெளியே வந்து நமது தோல் வறண்டு போவதைத் தடுக்கிறது.

இச்சுரப்பித்துளைகள் தோலில் சேரும் அழுக்குகள், இறந்தசெல்கள் போன்றவற்றால் மூடப்படுகிறது. அப்போது செபாசியஸ் சுரப்பியில் சுரக்கப்படும் எண்ணெயானது மேலே வர முடியாமல் அந்த இடத்தில் சிறிய வீக்கம் உண்டாகிறது. இதையே நாம் பரு என்று அழைக்கிறோம். பரு உண்டாகியவுடனே நோய்எதிர்ப்பு சக்தியைத் தரும் வெள்ளைஅணுக்கள் அவ்விடத்திற்கு விரைந்து செல்கிறது. இதனால் வீக்கம் உடைந்து அழுக்கு, இறந்தசெல்கள் வெளியேற்றப்பட்டு பரு குணமாகிறது. தோலைச்சுத்தமாக வைத்திருப்பது நன்றாக உடற்பயிற்சி செய்து வியர்வைச் சுரப்பி செயல்பட வைப்பதின் மூலம் பருக்களைத் தடுக்க முடியும். தோல்நோய்களாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்