SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

2018-03-04@ 01:41:32

நாகர்கோவில்: வாலிபர் கொலை, பெண்கள் பலாத்கார வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. 21 ஆண்டுகளுக்குப்பின் வழக்கு முடிவுக்கு வந்தது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே கரிஸ்மேட்டிக் என்ற பெயரில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வந்தது. இதை பாதிரியார் ஜான்ஜோசப் நடத்தி வந்தார். ஜெபக்கூடத்தில் கடந்த 1997ம் ஆண்டில் ஜான்ஜோசப், பெண் ஊழியர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆண் ஊழியர்களை நிர்பந்தித்து, பெண் ஊழியர்களுடன் உறவு கொள்ள செய்ததாகவும், அங்கு பணிபுரிந்த கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து புதைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல்  நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  கடந்த மாதம் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று மாவட்ட நீதிபதி கருப்பையா தீர்ப்பளித்தார். இதில் ஜான்ஜோசப் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதில் சந்தனராஜன், மரியஜான் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ஜோசப், ராணி, பெமி ஆகிய மூவரும் ஆஜர் ஆகி இருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்