SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய சுஸுகி பர்க்மேன் 125 சிசி ஸ்கூட்டர்

2018-02-25@ 01:43:47

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் பர்க்மேன் குடும்ப வரிசையில் பல மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 150சிசி மமுதல் 650சிசி வரையிலான மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனையில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பாரம்பரியமிக்க மேக்ஸி ஸ்கூட்டர் ரகத்தின் சுவையை இந்தியர்களுக்கும் கொடுக்க முனைந்துள்ளது சுஸுகி நிறுவனம். தனது பர்க்மேன் வரிசையிலான 125சிசி மாடலை இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருக்கிறது சுஸுகி நிறுவனம். சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான சந்தையை பெற்றிருக்கும் சுஸுகி நிறுவனம் தனது சந்தையை வலுப்படுத்தவும், புதிய ரகத்தின் சுவையை இந்தியர்களுக்கு ஊட்டும் விதமாகவும் இப்புதிய மாடலை விரைவில் அறிமுகம்செய்ய உள்ளது.

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புற்றீசல் போல் ஏராளமான மாடல்கள் குவிந்துவிட்டன. அதிலிருந்து மிக தனித்துவமான மாடலாக இந்த ஸ்கூட்டரின் தோற்றம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. மேக்ஸி ஸ்கூட்டர்களில் ஸ்டெப்டு ப்ரேம் என்ற ஏற்ற, இறக்கமான ப்ரேம் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், முன்புறம் மிக வித்தியாசமான வடிவமைப்பு வசீகரிக்கிறது. இந்திய 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதன்மை வகிக்கும் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரின் அதே 124 சிசி இன்ஜின்தான் இப்புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் பொதுவாக மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

 சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரின் டிசைனைவிட அதன் செயல்திறன் மிக்க இன்ஜினை விரும்பியே பலரும் வாங்குகின்றனர். அதே இன்ஜின்தான் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளது. இரண்டு பேர் அமர்ந்து செல்வதற்கு போதுமான இருக்கை வசதியையும், ஓட்டுனருக்கு அலுப்பில்லாமல் செல்வதற்கு ஏற்ற வகையிலும் இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு இந்த சஸ்பென்ஷன் அமைப்பு மேம்பட்ட பயண உணர்வை வழங்கும். முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், 90/90-12 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் 90/100-10 டயரும் பொருத்தப்பட்டுள்ளது.
 
 முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர சமயங்களில் மிகச்சிறப்பான பிரேக்கிங் திறனை பெறுவதற்கு இந்த டிஸ்க் பிரேக் சிறப்பானதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் நிச்சயம் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வர உள்ளது. ரூ.65,000 முதல் ரூ.70,000 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்