SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விளையாட்டு துளிகள்

2018-02-23@ 00:54:36

* இந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையேயான நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இலங்கை அணியிலிருந்து அசேலா குணரத்னே நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. வலது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக குணரத்னே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பந்துவீச்சாளர் மதுசான்கா, குஷால் பெரேரா ஆகியோரும் காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
* ஆல்ரவுண்டராக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்டியா செய்த அதிர்ஷ்டம். அவர் பேட்டிங்கில் எந்த விதத்திலும் அணிக்கு கைகொடுப்பதில்லை. பந்துவீச்சிலும் மந்தமாகவே செயல்படுகிறார். அப்படியிருந்தும் ஆல் ரவுண்டர் என்ற வகையில் அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கிறார். தயவுசெய்து அவரை கபில்தேவுடன் ஒப்பிட வேண்டாம். கபில்தேவ் இந்திய அணியில் இடம் பெறும் முன்பாக, முதல் தர போட்டிகளில் சதம் விளாசியிருக்கிறார். ஆனால் ஹர்திக் முதல் தர போட்டியில் பெரிய அளவில் பேட் செய்ததில்லை’’ என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி கூறி உள்ளார்.
* பாகிஸ்தானில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையேயான பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசன் 3 தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. முதல் லீக் போட்டியில், பெஷாவர் ஜால்மி, முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின.  முல்தான் சுல்தான்ஸ் முதல் முறையாக இத்தொடரில் களமிறங்குகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 34 போட்டிகள் நடக்கின்றன. இறுதிப் போட்டி மார்ச் 25ம் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்