SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து

2018-02-23@ 00:53:53

ஆக்லாந்து: நியூசிலாந்து உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தில் உள்ளூர் அணிகள் மோதும் போர்ட் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் நடக்கிறது. இதில், குவாலிபயர்-2 போட்டியில் ஆக்லாந்து, கேன்டர்பரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்தஆக்லாந்து அணியில் துவக்க வீரர் ஜீத் ரவல் அதிரடியாக ரன் குவித்துக் கொண்டிருந்தார். சுழற்பந்து வீச்சாளர் ஆன்ட்ரு எல்லீஸ் வீசிய பந்தை ரவல் விளாசினார்.

அப்போது புயல் வேகத்தில் வந்த பந்து, எல்லீசின் தலையில் பலமாக பட்டு நேராக பவுண்டரி எல்லைக்கு பறந்து சிக்சர் ஆனது. அதிர்ஷ்டவசமாக எல்லீசுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்போட்டியில் ஆக்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது. ரவல் 149 ரன் எடுத்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய கேன்டர்பரி அணி 37.2 ஓவரில் 197 ரன்னில் சுருண்டு தோற்றது. ஆக்லாந்து அணி பைனலுக்கு முன்னேறியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்